யுட்டிலிட்டி பிரிவில் நாங்கதான் மாருதி: மார்தட்டும் மஹிந்திரா

பொலிரோ, ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 மற்றும் ஸைலோ ஆகிய மாடல்கள் மூலம் யுட்டிலிட்டி மார்க்கெட்டில் மஹிந்திரா முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், காம்பெக்ட் எஸ்யூவி ரகத்தில் குவான்ட்டோ என்ற புதிய காரை நேற்று அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், குவான்ட்டோ அறிமுக விழாவில் மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் அனைத்து ரகங்களிலும் மாடல்களை வைத்திருக்கிறோம். குவான்ட்டோ வருகை மூலம் இது இன்னும் மேம்படும்.
மேலும், சிறிய கார் மார்க்கெட்டில் அதிக மாடல்களை வைத்துக் கொண்டு மாருதி முன்னிலை வகிப்பதுபோல், யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் நாங்கதான் மாருதி என்றால் கூற முடியும்," என்றார்.
போட்டியை சமாளிக்க ஸைலோவை குவான்ட்டோவாக மஹிந்திரா குழம்பிய நிலையில் அறிமுகப்படுத்தியது போன்று தோன்றுகிறதே என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அதனை முற்றிலுமாக அவர் மறுத்தார்.
மஹிந்திரா நிறுவனம் மிகத் தெளிவாகவும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கார்களை வடிவமைத்து களமிறக்கி வருவதாக அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








