புதிய காம்பெக்ட் எஸ்யூவியை வடிவமைக்க ஆயத்தமாகும் ஹூண்டாய்

Hyundai ix onic
காம்பெக்ட் எம்பிவி, எஸ்யூவி மார்க்கெட்டில் வெற்றிடம் விழாமல் தவிர்க்கும் வகையில் புதிய மினி எஸ்யூவியை ஹூண்டாய் மோட்டார்ஸ் வடிவமைக்க உள்ளது.

தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நம் நாட்டு கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில், 5 பேர் செல்லும் வசதி கொண்ட காம்பெக்ட் செக்மென்ட்டில் அடுத்தடுத்து பல புதிய எம்பிவி மற்றும் எஸ்யூவி மாடல்கள் களமிறங்குகின்றன.

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா மினி ஸைலோ என காம்பெக்ட் மாடல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும், குறைந்த விலையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கார்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் ஹூண்டாய் மோட்டார்சும் களமிறங்குகிறது. ஹூண்டாயின் பிரேசில் பிரிவு ஐ35 என்ற குறியீட்டு பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை தயாரிக்க உள்ளது.

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட திட்டமிட்டுள்ள இந்த மினி எஸ்யூவி முதலில் பிரேசில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய மினி எஸ்யூவியை அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

கவர்ச்சியான வடிவமைப்பு, தரமான இன்டிரியர் டெக்கரேஷனுடன் இந்த மினி எஸ்யூவி வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடன் வரும் என்பதால் மார்க்கெட்டில் நிச்சயம் கடும் போட்டியை கொடுக்கும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 10, 2012, 14:19 [IST]
English summary
The compact SUV segment is attracting more and more carmakers. Ford has unveiled its EcoSport based on the Fiesta platform and Renault has unveiled the Duster. Mahindra is preparing to launch the compact Xylo during this year and now we have reports that say Hyundai Motors also wants its own cheap compact SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+