அடுத்த ஆண்டு புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் இசூஸு
இசூஸு நிறுவனம் தனது எஸ்யூவி மற்றும் பிக்கப் ரக வாகனங்களை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது எம்யூ7 பிரிமியம் எஸ்யூவியை இந்திய மண்ணில் இசூஸு சோதனை நடத்தி வரும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. பிரபல ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்றின் இசூஸு எம்யூ7 எஸ்யூவியின் சோதனை ஓட்டப் படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த எஸ்யூவியின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

சோதனை ஓட்டம்
மஹாராஷ்டிராவில் இந்த எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 4 வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கும்.

பிரத்யேக ஸ்பை ஷாட்
சோதனையின்போது எடுக்கப்பட்ட படம். பின்புற தோற்றம். இந்த எஸ்யூவி ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்றதாக அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது.

எஞ்சின்
3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 161 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் யூரோ3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

இன்டிரியர்
டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட், கிளைமேட் கன்ட்ரோல், மானிட்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும். 7 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் இருக்கை அமைப்புடன் வருகிறது.

விலை?
மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள சாங்யாங் ரெக்ஸ்டன் மற்றும் அதிகம் விற்பனையாகும் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவிகளுக்கு இடைப்பட்ட விலையில், அதாவது ரூ.20 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
Spy Images source: TeamBHP


Click it and Unblock the Notifications








