ஜேம்ஸ்பாண்ட் படத்தில் லேண்ட்ரோவரின் சாகசங்கள்!
ஜேம்ஸ்பான்ட் படத்திற்காக கஸ்டமைசேஷன் செய்து பயன்படுத்தப்பட்ட டிஃபென்டர் பிக்கப் டிரக்கை பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கிறது ஜாகுவார் லேண்ட்ரோவர்.
ஜேம்ஸ்பான்ட் படங்களில் வாகனங்களின் மயிர்க்கூச்செரிய செய்யும் சாகச காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த நிலையில், ஜேம்ஸ்பான்ட் படங்களின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக ஜேம்ஸ்பான்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட கஸ்டமைஸ் செய்யப்பட்ட டிஃபென்டர் பிக்கப் டிரக்கை பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கிறது ஜாகுவார் லேண்ட் ரோவர்.

இந்த நிலையில், விரைவில் திரைக்கும் வரும் புதிய ஜேம்ஸ்பான்ட் படமான ஸ்கை ஃபால் திரைப்படத்தில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 77 கார்களை ஜாகுவார் லேண்ட்ரோவர் ஜேம்ஸ்பான்ட் படங்களுக்காக வழங்கியிருக்கிறது. ஸ்கை ஃபால் படத்துக்காக ஜாகுவார் எக்ஸ்ஜே கார் வழங்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








