இந்தியாவில் நம்பர் 1 இடத்தை குறிவைத்து ஜாகுவார் லேண்ட்ரோவர் விறு விறு

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முதலிடத்தை பிடிக்கும் முயற்சிகளை டாடாவின் கீழ் இயங்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளன.
இதற்காக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளை ஜாகுவார் லேண்ட்ரோவர் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் அனைத்து கார் மாடல்களையும் இந்தியாவில் தயாரிக்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதனால், இறக்குமதி வரியை தவிர்த்து மற்ற நிறுவனங்களை விட மிகக்குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் கணக்கு போட்டுள்ளது. இதன்மூலம், எளிதாக பிற நிறுவனங்களைவிட வெகு வேகமான விற்பனை வளர்ச்சியை எட்ட முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதை உணர்ந்து புதிய கார் ஷோரூம்களை அந்த நிறுவனம் திறந்து வருகிறது. தற்போது தனது 15 வது கார் ஷோரூமை குர்கானில் திறந்துள்ளது ஜாகுவார் லேண்ட்ரோவர்.
இந்த புதிய ஷோரூம் 15,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ஜாகுவாரின் எக்ஸ்ஜே, எக்ஸ்எப், எக்ஸ்எப்ஆர், எக்ஸ்கேஆர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்கேஆர் ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தவிர, லேண்ட் ரோவரின் ப்ரீலேண்டர் 2, டிஸ்கவரி 4, ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் இவோக் எஸ்யூவி ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








