ஜாகுவார் எக்ஸ்எப் காரை இந்தியாவில் அசெம்பிள் செய்ய டாடா முடிவு

Jaguar Car
இறக்குமதி வரியை தவிர்க்க ஜாகுவார் எக்ஸ்எப் காரை இந்தியாவிலேயே ஒருங்கிணைப்பு செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

ஜாகுவார் மாடல்களில் எக்ஸ்எப் காருக்கு தனி மதிப்பு இருக்கிறது. இந்தியாவிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பென்ஸ் இ-கிளாஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஆடி ஏ6 ஆகிய கார்களின் விலையுடன் ஒப்பிடுகையில் ஜாகுவார் எக்ஸ்எப் காரை அட வேணாம்பா என்று சொல்ல வைத்து விடுகிறது.

இறக்குமதி செய்து விற்பனை செய்வதால் காரின் விலையில் 75 சதவீதத்தை வாடிக்கையாளர் தலையில் சுமத்தப்படுகிறது. எனவே, எக்ஸ்எப் காரை பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவிலேயே ஒருங்கிணைப்பு செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், 30 சதவீதம் மட்டுமே கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

பிரபல ஆட்டோமொபைல் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா,"ஜாகுவார் எக்ஸ்எப் காருக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அந்த காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வது குறித்து பரிசீலிப்போம்," என்றார்.

இதனால், போட்டியாளர்களை ஜாகுவார் எக்ஸ்எப் எளிதாக எதிர்கொள்ளும். கூப்பாடு போடாமல் உட்கார்ந்த இடத்திலேயே வாடிக்கையாளர்களை தேடி வரவழைக்க முடியும் என்பதால் விற்பனையையும் சுலபமாக அதிகரிக்கலாம் என டாடா கணக்கு போட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 4, 2012, 16:17 [IST]
English summary
Imported cars seems to be attracting teeming custom duties. One such car is the Jaguar XF, which has high demand. However, the lofty price tag the XF holds against the competitors. So, Jaguar's Parent comapany Tata is planning to assemble the XF in India to avoid the import duty.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+