ஜீப் பிராண்டின் பிரிமியம் எஸ்யூவியை களமிறக்கும் ஃபியட்
எஸ்யூவி உலகில் புகழ்பெற்ற ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் கெரோக்கி பிரிமியம் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஃபியட்.
அமெரிக்காவின் கிறிஸ்லர் நிறுவனத்தின் ஜீப் பிராண்டுக்கு உலக அளவில் பெரும் பெயர் இருக்கிறது. எஸ்யூவி தயாரிப்பில் சூரர்களாக கருதப்படும் ஜீப் பிராண்டு தற்போது இத்தாலியை சேர்ந்த ஃபியட் வசம் இருக்கிறது.
இந்த நிலையில்,இந்தியாவில் பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து ஜீப் பிராண்டு எஸ்யூவியை விற்பனைக்கு கொணடு வருகிறது ஃபியட்.

முதலில் ஜீப் பிராண்டின் கிரான்ட் கெரோக்கிஎஸ்யூவியை விரைவில் களமிறக்க ஃபியட் திட்டமிட்டுள்ளது. இது பிரிமியம் எஸ்யூவி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
ரூ.40 லட்சம் விலைக்குள் கிரான்ட் கெரோக்கிஎஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஃபியட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
"தரம் மற்றும் மதிப்புமிக்க கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதுமே வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், கிரான்ட் கெரோக்கிஎஸ்யூவிக்கும் வரவேற்பு கிடைக்கும்," என்று நம்புவதாக ஜீப் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் மான்லே தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரான்ட் கெரோக்கிஎஸ்யூவி 4ம் தலைமுறையை சேர்ந்தது. தோற்றத்தில் கம்பீரமும், நவீன உலகிற்கேற்ற வடிவமைப்பும் கிரான்ட கெரோக்கிஎஸ்யூவியின் மதிப்பை உயரத்தும் அம்சங்கள்.
ஆனால், கிரான்ட் கெரோக்கிஎஸ்யூவியில் 5 பேர் மட்டுமே பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவி மெர்சிடிஸ் பென்ஸ் எம் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட எஸ்யூவி. இதில், ஃபியட் நிறுவனத்தின் 3.0 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








