சீனாவில் செர்ரி மோட்டார்சுடன் கைகோர்க்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் தற்போது டாடா மோட்டார்சின் துணை நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. டாடாவின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு அந்த நிறுவனங்களின் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன.
உலகின் இரண்டாவது வேகமாக வளரும் கார் மார்க்கெட்டான இந்தியாவில் தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் துணையுடன் வர்த்தக விரிவாக்கத்தை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, உலகின் முதலாவது வேகமாக வளரும் மார்க்கெட்டான சீனாவிலும் தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இதற்காக அங்கு கூட்டணி அமைத்து கார் விற்பனையில் ஈடுபட அந்த நிறுவனங்கள் முடிவு செய்து சீன ஆட்டோமொபைல் நிறுவனத்தை தேடி வந்தன. இந்த நிலையில், சீனாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களி்ல ஒன்றான செர்ரி மோட்டார்சை தனது புதிய பார்டனராக ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிவித்துள்ளது.
செர்ரி நிறுவனத்துடன் விரைவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கூட்டணி அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளன. இதைத்தொடர்ந்து, சீனாவில் செர்ரி ஆலைகளில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் உற்பத்தி துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








