பாய் பிரண்டுக்கு ரூ.2 கோடி காரை பரிசாக கொடுத்த கிம் கர்தஷியான்

அங்கங்களை காட்டி பல லட்சம் நெஞ்சங்களை கொள்ளையடித்த கிம் தர்ஷியான் பற்றிய செய்திகளுக்கு பஞ்சமில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஸ்விம் சூட்டில் போஸ் கொடுத்து இணைய தளங்களில் அனலை பரப்பினார்.
இந்த நிலையில், தனது புதிய பாய் பிரண்டுக்கு சூப்பர் காரை பரிசாக வழங்கி தனது பெயரை செய்தியாக்கியுள்ளார் கிம்.
கடந்த ஆண்டு கல்யாணம் செய்தி கிரிஸை 72 நாட்களில் கழட்டிவிட்ட கிம், தற்போது கன்யே வெஸ்ட்டுடன் சுற்றி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கன்யே வெஸ்ட்டின் 35 வது பிறந்தநாளுக்கு ரூ.2 கோடி மதிப்புடைய லம்போர்கினி அவேன்டேடார் சூப்பர் காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார் கிம் தர்ஷியான்.
கிம் தர்ஷியான் வழங்கிய அவேன்டேடார் எல்பி 7000-4 சூப்பர் கார் அதிகபட்சம் 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. வெறும் 2.9 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்தது. கருப்பு நிறம் கொண்ட அந்த கார் மேட் பினிஷ் செய்யப்பட்டது.
இந்த காரில் 700 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கன்யே வெஸ்ட்டுக்கு பெரிய கிப்ட் கொடுக்க எண்ணி இந்த காரை பரிசாக வழங்கியதாக கிம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








