'கொலவெறி' ஸ்டைலில் நானோ காருக்கு பாட்டு பாடிய தனுஷ்!

தனுஷ்
'ஒய் திஸ் கொலவெறி' ஸ்டைலில் புதிய பாடல் ஒன்றை நானோ கார் விளம்பரத்துக்காக பாடி, நடித்துள்ளார் தனுஷ். கொலவெறி பாடல் தமிங்கிலிஷில் வந்த நிலையில், நானோ காருக்காக தனுஷ் பாடியிருக்கும் அசத்தலான பாடல் தமிழ் மற்றும் இந்தி கலந்த கலவையாக எழுதப்பட்டுள்ளது.

மேலும், பாடியது மட்டுமின்றி இந்த விளம்பர படத்தில் தனுஷ் ஒரு சமுதாய பொறுப்புடைய இளைஞனாகவும் நடித்துள்ளார். போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் தனது நானோ காரில் தனுஷ் செல்கிறார். அப்போது, அவரது காருக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முடியாமல் தத்தளிக்கிறது.

உடனே காரிலிருந்து இறங்கி செல்லும் தனுஷ் அந்த ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் சிறுமியை தூக்கி வந்து தனது நானோ காரில் ஏற்றுகிறார். பின்னர் கிடைக்கும் கேப்புகளில் புகுந்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.

அதாவது, குறுகிய இடத்திலும் செல்லும் நானோ காரும், தனுஷும் சேர்ந்து அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றுவது போன்று படமாக்கப்பட்டுள்ளது. பிற கார்களைவிட நானோ அனைத்து விதத்திலும் சிறந்தது என்பதை மையமாக கொண்டு இந்த விளம்பர படம் எடுக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் இந்த விளம்பர படம் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. கொலவெறி பாடல் மூலம் நாடு முழுவதும் புகழின் உச்சாணிக்கு சென்ற தனுஷுக்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நானோ கார் விளம்பத்துக்காக தனுஷ் பாடியுள்ள பாடலும் நிச்சயம் அவருக்கு மேலும் வாய்ப்புகளை குவிக்கும் என்று கூறலாம்.

(வீடியோ பதிவை காண இங்கே கிளிக் செய்யவும்)

More from DriveSpark

Article Published On: Monday, August 13, 2012, 15:30 [IST]
English summary
Dhanush, the kollywood star famous for his Kolaveri song has stared in yet another single. Dhanush has acted in a new TV commercial for the Tata Nano. Shot in Mumbai, the advertisement highlight's the Nano's user friendly practicality.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+