டாய்லெட், கேன்டீனுடன் வால்வோ பஸ்: கர்நாடகத்தில் அறிமுகமாகிறது
கழிவறை, கேன்டீன் வசதியுடன் கூடிய 25 வால்வோ பஸ்களை கர்நாடக போக்குவரத்து கழகம் விரைவில் வாங்குகிறது. இவை அனைத்தும் படுக்கை வசதி கொண்டதாக இருக்கும்.
நாட்டிலேயே கர்நாடக போக்குவரத்து கழகம் பயணிகள் சேவையில் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் சிறந்த போக்குவரத்து என்பதற்காக விருதுகளையும் வாங்கியுள்ளது.
இந்த நிலையில், முன்பு தமிழகத்தில் ஜேஜேடிசி என்ற பெயரில் ஓடிய நீண்ட தூர பஸ்களில் இருந்தது போன்று டாய்லெட் மற்றும் கேன்டீன் வசதிகளுடன் கூடிய வால்வோ பஸ்களை கர்நாடக போக்குவரத்து துறை வாங்குகிறது.

டீ, காபி, பிஸ்கட் ஆகியவை இந்த பஸ்களில் கிடைக்கும். முதற்கட்டமாக 25 மல்டி ஆக்சில் பஸ்களை வால்வோ நிறுவனத்திடமிருந்து கேஎஸ்ஆர்டிசி வாங்குகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் படுக்கை வசதி கொண்டது.
இந்த பஸ்கள் அனைத்தும் நீண்ட தூர வழித்தடங்களில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் விடப்படும். பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தால் பின்னர் கூடுதல் பஸ்கள் வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கர்நாடக போக்குவரத்து கழக அமைச்சர் ஆர். அசோக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒவ்வொரு பஸ்சும் ரூ.80 லட்சம் விலையில் வாங்கப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications








