சூப்பர் கார் மோதி தூள் தூளான பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்குகள்!

இத்தாலியிலுள்ள கோமோ என்ற நகரில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையில் அதிவேகமாக வந்த லம்போர்கினி சூப்பர் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்புற திசையில் சீறிப் பாய்ந்துள்ளது. அப்போது அங்குள்ள பிஎம்டபிள்யூ ஷோரூம் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூப்பர் பைக்குகளை இடித்துத் தள்ளி சென்று ஒரு வழியாக நின்றுள்ளது.
இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்குகள் தூள் தூளானது. இதில், பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்தில் காரை ஓட்டி வந்தவரும், பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், கார் சீறிப் பாய்ந்து வந்தபோது எதிரில் யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை. இந்த விபத்தில் காரின் முன்பக்கமும், வலதுபக்கமும் சின்னாபின்னாமாகியது. ஆனால், இந்த சம்பவம் குறி்தது பத்திரிக்கைகளுக்கு போலீஸ் தரப்பில் இருந்து தகவல்கள் அளிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








