சூப்பர் எஸ்யூவியை வடிவமைத்து அசத்திய லம்போர்கினி

Lamborghini
சூப்பர் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி சூப்பர் எஸ்யூவியை வடிவமைத்து அசத்தியுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ள ஆட்டோ ஷோவில் இந்த சூப்பர் எஸ்யூவி முதன்முறையாக தரிசனம் தர இருக்கிறது.

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. அந்த நிறுவனத்தின் அவென்டேடார் சூப்பர் காருக்கு தனி ரசிக பட்டாளமே இருக்கிறது.

இந்த நிலையில், அவென்டேடாரின் ஒத்ததாகவே புதிய எஸ்யூவி சூப்பர் காரை லம்போர்கினி வடிவமைத்துள்ளது. ஸ்டாக் யார்டில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த சூப்பர் எஸ்யூவியை படமெடுக்க யாரையும் அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், அந்த எஸ்யூவியின் புகைப்படத்தை தற்போது லம்போர்கினி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், விரைவில் நடைபெற இருக்கம் பீஜிங் ஆட்டோ ஷோவில் இந்த எஸ்யூவியை பார்வைக்கு அறிமுகப்படுத்த உள்ளது லம்போர்கினி.

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் எஸ்யூவி பார்க்கவே மிரட்டலாக இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவியில் ரியர் வியூ மிரர்கள் கிடையாது. இதற்கு பதிலாக பக்கவாட்டிலும், பின்புறத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி பற்றிய தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளது லம்போர்கினி. பீஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும்போது கூடுதல் விபரங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 10, 2012, 12:26 [IST]
English summary
Lamborghini which has developed a new SUV which is possibly based on the Audi Q7 has secretly displayed its new model to select group of customers in New York before its official unveiling at the Beijing Auto Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+