லம்போர்கினியின் சூப்பர் எஸ்யூவியின் நாமகரணம் உரஸ்

அந்த வகையில், சூப்பர் கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான லம்போர்கினி நிறுவனம் தற்போது சூப்பர் எஸ்யூவியை வடிவமைக்கிறது. கடந்த வாரம் லம்போர்கினியின் புதிய எஸ்யூவி பற்றிய செய்தியை கூறியிருந்தோம்.
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக புதிய எஸ்யூவியை பார்வைக்கு வைக்கவுள்ளது லம்போர்கினி. தனது டிசைன் வடிவமைப்பு தத்துவத்திலேயே புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பதால், லம்போர்கினியின் புதிய எஸ்யூவி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், புதிய எஸ்யூவிக்கு உரஸ் என்று லம்போர்கினி பெயரிட்டுள்ளதாக சீன இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. லம்போர்கினியின் புதிய எஸ்யூவி 600 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சினுடன் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








