டிரைவிங் லைசென்ஸ் வாங்க 92 முறை தேர்வு எழுதியும் தேறாத இளைஞர்

பிரிட்டனில் டிரைவிங் லைசென்ஸ் கொடுப்பதற்கான விதிமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. எழுத்துத் தேர்வு மற்றும் செயல்முறை(டிரைவிங் திறன்) தேர்வு என இரண்டிலும் வெற்றிப் பெற்றால்தான் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.
இந்த நிலையில், அங்குள்ள லீ செஸ்டர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக விண்ணப்பித்தார். எழுத்துத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றால்தான் செயல்முறை(டிரைவிங் திறன்) தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
ஆனால், அந்த இளைஞர் இதுவரை 92 முறை எழுத்து தேர்வு எழுதியும் இதுவரை தேறவில்லை. ஆனால், சற்றும் மனம் தளராத அந்த இளைஞர் தற்போது அடுத்த எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
பிரிட்டனில் லைசென்ஸ் பெறுவதற்கான எழுத்து தேர்வு ஒரு மணி நேரம் நடக்கும். இதில், போக்குவரத்து விதிமுறைகள், அவசர காலங்களில் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை பற்றி கேள்விகள் கேட்கப்படும்.
28 வயதாகும் அந்த இளைஞர் இத்தனை முறை தேர்வெழுதியும் ஒரு முறை கூட அவரால் சரியான பதிலளித்து வெற்றி பெற முடியவில்லை. மேலும், ஒரு எழுத்து தேர்வுக்கு ரூ.2,400 கட்டணமாக செலுத்தி இதுவரை ரூ.2.20 லட்சம் வரை செலவானதுதான் மிச்சம். இன்னும் டிரைவிங் லைசென்ஸ் கிடைத்தபாடில்லை. அடுத்த தேர்விலாவது வெற்றி பெறுவாரா இந்த பரிட்சை மன்னன்.


Click it and Unblock the Notifications








