தோஸ்ட்டுக்கு பர்த் டே: 'தோஸ்த்'துடன் கொண்டாடிய லேலண்ட்!

Dost
தோஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் மாடலை அசோக் லேலண்ட்- நிசான் கூட்டணி அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம் ஜப்பானிய நிறுவனமான நிசானுடன் இணைந்து கடந்த ஆண்டு இலகு ரக வாகன தயாரிப்பில் இறங்கியது. முதலாவதாக இந்த கூட்டணி தோஸ்ட் என்ற மினி டிரக்கை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

2.5 டன் சுமை இழுக்கும் திறன் கொண்ட இந்த மினி டிரக் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தோஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டு நேற்றுடன் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், அசோக் லேலண்ட் மற்றும் நிசான் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தோஸ்ட் முதலாவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்பெஷல் எடிசன் தோஸ்ட் வாகனத்தையும் அறிமுகம் செய்தனர். நாடு முழுவதும் உள்ள 45 டீலர்களில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் தோஸ்ட் கிடைக்கும்.

இதுகுறித்து அசோக் லேலண்ட் துணைத் தலைவர் சுமந்த்ரன் கூறுகையில்,"இந்த சிறப்பான தருணத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கும் வகையில் புதிய ஸ்பெஷல் எடிசன் தோஸ்ட்டை அறிமுகம் செய்துள்ளோம்.

தோஸ்ட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தேவையை சமாளிக்கும் விதமாக உற்பத்தி திறனையும் விரைவில் அதிகரிக்க உள்ளோம்," என்றார்.

பாடி கிராபிக்ஸ், கிரே கலர் பீயேஜ் பினிஷிங்குகள், புல் பார்ஸ் மற்றும் டீசல் டேங்க் கார்டுகள் என ஏராளமான கூடுசல் வசதிகள் மற்றும் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் தோஸ்ட் அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. சென்னையில் ரூ.4.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தோஸ்ட் மினி டிரக்கின் ஸ்பெஷல் எடிசனுக்கு கூடுதலாக ரூ.15,000 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 12, 2012, 10:10 [IST]
English summary
Country's leading heavy vehicle manufacturer Ashok Leyland has unveiled the limited edition of its latest small commercial vehicle 'DOST' on its first anniversary.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+