கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் இன்னோவா அறிமுகம்

ஏரோ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய இன்னோவா 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். தற்போது விற்பனையில் இருந்து வரும் ஜிஎக்ஸ் வேரியண்ட்டில் கொஞ்சம் கூடுதல் அம்சங்களை சேர்த்து ஏரோவாக்கியிருக்கிறது டொயோட்டா.
லிமிடேட் எடிசன் இன்னோவா யூரோ3 மற்றும் யூரோ 4 மாடல்களில் கிடைக்கும். சூப்பர் ஒயிட் மற்றும் சில்வர் மைகா மெட்டாலிக் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த புதிய லிமிடேட் எடிசன் இன்னோவா வந்துள்ளது. மொத்தம் 1,200 இன்னோவா ஏரோ லிமிடேட் எடிசன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் வரை அல்லது ஸ்டாக் இருக்கும் வரை இந்த லிமிடேட் எடிசன் இன்னோவா கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னோவா ஏரோவின் கூடுதல் அம்சங்கள்:
டூவல் டோன் முன்பக்க பம்பர் ஸ்பாய்லர்
ஸ்போர்ட்டியான ரியர் ஸ்பாய்லர்
சைடு ஸ்கர்ட்
லிமிடேட் எடிசன் ஏரோ சின்னம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கிறது இன்னோவா ஏரோ.
இரு வேரியண்ட்களில் கிடைக்கும் இன்னோவா ஏரோ டெல்லியில் ரூ.12,25,677 விலையிலும், மற்றொரு வேரியண்ட் ரூ.12,30,207 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








