நடிகை லின்ட்சே ஓட்டிச் சென்ற போர்ஷே சூப்பர் கார் டிரக்கில் மோதி விபத்து!
சர்ச்சைக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நாயகி லின்ட்சே மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதிவேகத்தில் போர்ஷே சூப்பர் காரை ஓட்டிச் சென்று டிரக்கில் மோதி விபத்தில் சிக்கினார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் சேதாரமின்றி உயிர் தப்பினார்.
கலிபோர்னியாவில் நடந்து வரும் மறைந்த ஹாலிவுட் கவர்ச்சி நடிகை எலிசபெத் டெய்லரின் வாழ்க்கையை மையமாக கொண்ட சினிமாவின் படபிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு லின்ட்சே சென்று கொண்டிருந்தார். வாடகைக்கு எடுக்கப்பட்ட போர்ஷே 911 சூப்பர் காரில் அவர் தனது உதவியாளருடன் சென்றுள்ளார். காரை லின்ட்சே ஓட்டிச் சென்றுள்ளார்.

அதிவேகத்தில் ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து டிரக் ஒன்றின் மீது பயங்கரமாக மோதிவிட்டார். இதில், அந்த போர்ஷே 911 காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால், அந்த காரில் இருந்த பாதுகாப்பு வசதிகளால் லின்ட்சேவும், அவரது உதவியாளரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லின்ட்சே அடுத்த 2 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.
லின்ட்சே குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நடிகை லின்ட்சே ஏற்கனவே குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாக கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தவர். மேலும், அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு பின்னர் வழங்கப்பட்டது.
தவிர, குடி பழக்கத்திலிருந்து விடுவிக்க மறுவாழ்வு மையத்திலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போதாக்குறைக்கு கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் தனது தாயாருடன் உதட்டோடு உதடு வைத்து மிக நெருக்கமாக லின்ட்சே லோஹன் முத்தம் கொடுப்பது போன்று வெளியான புகைப்படம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படு்த்தியது.
இந்த நிலையில், மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்றது நிரூபிக்கப்பட்டால் அவரது டிரைவிங் லைசென்ஸ் மீண்டும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








