வெறும் கையால் முழம் போட வைக்கும் மார்க்கெட்டிங் தந்திரம்!

Mahindra XUV500
புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும்போது கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்வது வாடிக்கையான விஷயம். இது காலம் காலமாய் நிறுவனங்கள் கடைபிடித்து வரும் விற்பனை கொள்கை. ஆனால், சில தயாரிப்புகள் மட்டும் இதிலிருந்து விதிவிலக்காகி சாதனைகளை புரிந்து வருகின்றன. வெறும் கையை கொண்டு முழம் போடும் பழமொழிக்கு ஏற்ப குறைந்த பட்ஜெட்டில் அதிக விளம்பரம் தேடுவது புதிய மார்க்கெட்டிங் யுக்தியாக மாறியிருக்கிறது.

உதாரணத்திற்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிநதிராவின் புதிய எக்ஸ்யூவி அறிமுகமாவதற்கு முன்பு பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. ஆனால், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக புதிய எக்ஸ்யூவி எப்படியிருக்கும், அதன் விலை எவ்வளவு இருக்கும் என்பது போன்ற விஷயங்களை முன்வைத்து ஒரு பெரிய எதிர்பார்ப்பை சத்தமில்லாமல் உருவாக்கி வந்தது மஹிந்திரா. மேலும், காரின் விலை நிர்ணயம் குறித்து போட்டியையும் நடத்தியது.

அதாவது, சின்ன மீனை போட்டு பெரிய மீனை இழுப்பது போல் மிக நேர்த்தியாக காய் நகர்த்தியது மஹிந்திரா. எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு கோடி கோடியாய் விளம்பரத்துக்கு செலவிடப்படவில்லை. ஆனால், அதன் மீதான எதிர்பார்ப்பு மட்டும் அதிகரிக்கப்பட்டு வந்ததுதான் தந்திரம்.

அதேவேளை, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிற புதிய கார் மாடல்களுக்கு கோடி கோடியாய் செலவிட்டும் விற்பனையில் பெரிய அளவில் சாதித்துவிடவில்லை. ஆனால், எக்ஸ்யூவியை எடுத்துக்கொண்டால் மார்க்கெட்டில் அறிமுகமானது முதல் மிகப்பெரிய அலையை உருவாக்கியிருக்கிறது.

இதுமட்டுமல்ல, தனது ஆஷா மொபைலுக்கும் இதே விற்பனை கொள்கையை கடைபிடித்து வெகுவாக பிரபலமடையச் செய்துள்ளது நோக்கியா. இதே மார்க்கெட் தந்திரத்துடன் மற்றொரு உதாரணத்தை கூற வேண்டுமெனில், விக்கி டோனார் பாலிவுட் படத்தை கூறலாம். விக்கி டோனார் சினிமா 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இதே சமயத்தில் உருவான மற்றொரு படமான ஷாரூக்கானின் ரா.ஒன் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்யப்பட்டது. ஏராளமான பிராண்டுகளுடன் இணைத்து பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

ஆனால், விக்கி டோனார் படம் 40 கோடி வசூலை குவித்தது. பாலிவுட் சினிமா உலகிலும் முக்கிய இடத்தை பிடித்தது. ஆனால், ரா.ஒன் படம் வெளியான உடனே அதன் மீதான எதிர்பார்ப்பு பலூனில் காற்றுப் போனது போல ஆயிற்று. எனவே, பிராண்டுகளை மார்க்கெட்டில் நிலை நிறுத்தும்போது கோடிகளை பறக்கவிடுவது முக்கியமல்ல. புதிய தயாரிப்புகளை மார்க்கெட்டில் நிலைநிறுத்தும்போது தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு சிறந்த விற்பனைக் கொள்கைகளை வகுப்பதும் அவசியம்.

மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்க வித்தியாசமான யுக்திகளை கடைபிடிப்பது அவசியம் என்று கூறுகின்றனர் மார்க்கெட்டிங் நிபுணர்கள். தவிர, இந்த மார்க்கெட் யுக்தியை செயல்படுத்துவதற்கான அஸ்திவாரமாக தற்போது இணையதளம் மாறியிருப்பதும் ஒரு வரப்பிரசமாகவே இருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 4, 2012, 13:00 [IST]
English summary
Conventional wisdom says there is a direct correlation between marketing spends and market impact. But products like Nokia’s Asha, M&M’s XUV500 and Vicky Donor have shown that you can win big on a shoe-string budget. Here’s how they did it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+