கார்களுக்கு குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டம்: எஸ்பிஐ அறிவிப்பு

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) திகழ்கிறது. மேலும், வாகனங்களுக்கு கடன் வழங்குவதிலும் எஸ்பிஐதான் தற்போது முன்னிலை வகிக்கிறது.
கடந்த மார்ச்சுடன் முடிந்த நிதி ஆண்டில் அதிகம் கடன் வழங்கிய நிறுவனமாக எஸ்பிஐ மாறியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.20,000 கோடியை வாகன கடனாக வழங்கியுள்ளது எஸ்பிஐ.
அதிலும், குறிப்பாக கார் கடன் வழங்குவதில் எஸ்பிஐ முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், தவணையை எத்தனை ஆண்டுகள் வரை செலுத்தும் வகையில் இருந்தாலும், அதற்கு வெறும் 11.25 சதவீத வட்டியில் கடன் வழங்கும் வகையிலான புதிய கார் கடன் திட்டத்தை விரைவி்ல அறிமுகம் செய்ய உள்ளது எஸ்பிஐ.
இது கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த ஜனவரியில் கார் கடன் வட்டியை 12 சதவீதமாக உயர்த்தியது. இதனால், அந்த நிறுவனத்தின் கார் கடன் பெறும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. எனவே, மீண்டும் குறைந்த வட்டி கடன் திட்டத்தை எஸ்பிஐ அறி்முகப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








