ஆச்சர்யம்.. ஆனால் உண்மை... சீனாவில் ஓடும் 3 வீல் மாருதி 800 கார்

சீனாவை சேர்ந்த ஜினன் மோட்டார்சைக்கிள் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் இந்த 3 வீல் காரை தயாரித்து வருகிறது. கிங்கி ஆல்ட்டோ ட்ரைசைக்கிள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த காரில் வெறும் 125 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் சீன சாலைகளுக்கு பரிட்சயம்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் இந்த 3 சக்கர காரை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. நம்மூர் ரேட்டுக்கு ரூ.75,000 முதல் ரூ.80,000 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த 3 வீல் சர்க்கஸ் காருக்கு தற்போது மவுசு குறைந்துவிட்டது.
இதனால், இந்த காரின் உற்பத்தியை நிறுத்த ஜினன் மோட்டார்சைக்கிள் கார்ப்பரேஷன் முடிவு செய்துவிட்டது. இதனால், 3 வீல் அவதார மாருதி 800 காரை இனி சீன சாலைகளில் காண்பது அரிதாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








