இறக்குமதி கார்களுக்கான வரியை அதிரடியாக குறைத்த மராட்டிய அரசு

நாட்டில் இறக்குமதியாகும் கார்களில் பெரும்பான்மையான கார்கள் மும்பையில்தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மராட்டிய அரசு தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில் இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை உயர்த்தியது.
பெட்ரோல் கார்களுக்கு 2 சதவீதமும், டீசல் கார்களுக்கு 4 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டது. இதனால், கார்களை இறக்குமதி செய்யும் உரிமையாளர்கள் மஹாராஷ்டிராவில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிக்கு பயந்துகொண்டு அண்டை மாநிலங்களில் காரை பதிவு செய்யத் துவங்கினர்.
அதன்பின், மஹாராஷ்டிராவுக்கு எடுத்து வந்து ஓட்டத் துவங்கினர். இதனால், அரசுக்கு பெரும் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை கவனத்தில் கொண்ட அம்மாநில அரசு தற்போது இறக்குமதி கார்கள் மீதான வரியை அதிரடியாக குறைத்துள்ளது.
இறக்குமதியாகும் பெட்ரோல் கார்களுக்கு 22 சதவீதமும், டீசல் கார்களுக்கு 26 சதவீதமும் விதிக்கப்பட்டு வந்த வரி தற்போது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








