3ம் இடத்தை மஹிந்திராவிடம் கோட்டை விட்ட டாடா!

கார் மார்க்கெட்டில் 3ம் இடத்திலிருந்த டாடா மோட்டார்ஸ் தனது இடத்தை மஹிந்திராவிடம் பறிகொடுத்துவிட்டு 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

கார் மார்க்கெட்டில் மாருதி, ஹூண்டாய்க்கு அடு்த்து விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 3ம் இடத்தில் இருந்து வந்தது. நீண்ட காலமாக 3ம் இடத்தை டாடா மோட்டார்ஸ் கெட்டியாக பிடித்து வைத்திருந்தது. ஆனால், அந்த இடம் தற்போது டாடாவுக்கு இல்லை. மஹிந்திரா அந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) இடையில் 60,405 கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தமாக 61,504 கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 500 வாடிக்கையாளர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எக்ஸ்யூவி வந்தபின் மஹிந்திராவின் கார் விற்பனை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. எக்ஸ்யூவி விற்பனை மூலமாகவே மஹிந்திரா 3ம் இடத்துக்கு வெகு சுலபமாக முன்னேறியுள்ளது.

ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை. நானோ விற்பனை கூட டாடா எதிர்பார்க்கும் இல்லை. இதனால், டாடா மோட்டார்ஸ் தனது இடத்தை தக்கை வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 18, 2012, 13:17 [IST]
English summary
Tata Motors which had long held the third spot in the top Indian car makers' list has lost that position to its Indian Counterpart Mahindra and Mahindra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+