புனேயில் பிரம்மாண்ட டூ வீலர் ஆராய்ச்சி மையம்: மஹிந்திரா திறந்தது

புனேயில், நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட இருசக்கர வாகன ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தை மஹிந்திரா திறந்துள்ளது.

வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா குழுமம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் பின்தங்கி இருக்கிறது. இருசக்கர வாகன மார்க்கெட்டிலும் முன்னிலை பெறுவதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தீவிரப்படுத்தியிருக்கிறது.

Mahindra R D center

இந்த நிலையில் புனேயில் பிரம்மாண்டமான புதிய இருசக்கர ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தை மஹிந்திரா திறந்துள்ளது. மஹிந்திரா குழுமத்தின் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய மையத்தை திறந்து வைத்தார்.

இந்த ஆய்வு மையத்திற்காக 100 கோடி ரூபாயை அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த ஆய்வு மையத்தில் பல புதிய மாடல்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த ஆய்வு மையத்துக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரியவாகன ஆராய்ச்சி மையமாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2012, 15:10 [IST]
English summary
Mahindra 2 Wheelers formally inaugurated its new Research and Development centre in Pune. The future ready centre which is the third largest of its kind in India was inaugurated by Anand Mahindra, Vice Chairman and Managing Director, Mahindra Group.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+