சாங்யாங்குடன் இணைந்து ரஷ்யாவில் கார் உற்பத்தியை துவங்கும் மஹிந்திரா

சர்வதேச அளவில் தனது கார் விற்பனையை துவங்கும் பெரிய அளவிலான வர்த்தக திட்டங்களை மஹிந்திரா செயல்படுத்தி வருகிறது.
முதலாவதாக, தனது குளோபல் எஸ்யூவியுடன் தென் ஆப்ரிக்காவில் அடியெடுத்து வைத்தது. இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது கார் விற்பனையை துவங்கும் பணிகளை அந்த நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவில் கார் உற்பத்தியை துவங்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது கீழ் செயல்படும் சாங்யாங் மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:
"ரஷ்யாவில் உள்ள சாங்யாங் மோட்டார்சின் அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தபின் அங்கு ஆலை அமைத்து கார் அசெம்பிளிங்கை துவங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், தற்போது எக்ஸ்யூவி 500வுக்கான தேவை கணிசமாக இருக்கிறது. எனவே, எக்ஸ்யூவி உற்பத்தியை மாதத்திற்கு 5,000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications