ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பொலிரோ ஜீப்புகளை விற்ற மஹிந்திரா
கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் பொலிரோ எஸ்யூவி கார்களை விற்று மஹிந்திரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மஹிந்திராவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான பொலிரோ எஸ்யூவி, விற்பனையில் சத்தமில்லாமல் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல் என்று ஏற்கனவே பெயரெடுத்து விட்ட பொலிரோ தற்போது பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் பொலிரோவின் விற்பனை ஒரு லட்சத்தை கடந்தது. பொலிரோ அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆண்டு விற்பனை ஒரு லட்சத்தை கடந்தது இதுவே முதன்முறை. கடந்த ஆண்டில் மட்டும் 1,00,686 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகியிருக்கின்றன.
இது மட்டுமில்லாமல் இந்திய கார் விற்பனையில் 7 வது இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு புதிய புதிய எஸ்யூவி மாடல்கள் வந்தாலும் தொடர்ந்து 6 வது ஆண்டாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல் என்ற பெருமையையும் பொலிரோ பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








