எஸ்யூவிக்கு குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்களை தேர்வு செய்த மஹிந்திரா

கடந்த மாதம் 25ந் தேதி முதல் கடந்த 3ந் தேதி வரை மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 500க்கு 2ம் கட்ட புக்கிங் நடந்தது. சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 19 நகரங்களில் நடந்த இந்த முன்பதிவில் 7,200 எக்ஸ்யூவிக்கு மட்டுமே புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மஹிந்திரா அறிவித்தது.
அதற்கு மேல் புக்கிங் செய்யப்பட்டால் வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என்றும் மஹிந்திரா அறிவித்தது. வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பொறுப்பை டெலாய்ட்டி டச் தொமட்சூ நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், 2ம் கட்ட புக்கிங்கில் யாரும் எதிர்பாராத வகையில், புதிய எக்ஸ்யூவி 500க்கு 25,000 பேர் முன்பதிவு செய்தனர். இதையடுத்து, வாடிக்கையாளர்களை தேர்வு செய்யும் குலுக்கல் நேற்று மும்பையில் நடந்தது.
இதில், குலுக்கல் முறையில் 7,200 வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் இன்று மாலை மஹிந்திரா இணையதள பக்கத்தில் வெளியிடப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
குலுக்கலில் தேர்வு பெறாத வாடிக்கையாளர்களுக்கு முன்பணமாக பெறப்பட்ட ரூ.80,000 இன்னும் ஒரு மாதத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








