சாங்யாங் கூட்டணியில் புதிய எஞ்சின்களை தயாரிக்கும் மஹி்ந்திரா

எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் தற்போது மஹிந்திராவின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து புதிய எஸ்யூவி மாடல்களை தயாரிக்க இருப்பதாக மஹிந்திரா சமீபத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், சாங்யாங் மோட்டார்சுடன் இணைந்து புதிய எஞ்சின்களையும் தயாரித்து வருவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா சாங்யாங் தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து 3 புதிய எஞ்சின் பிளாட்பார்ம்களை உருவாக்கி வருகிறோம்.
இந்தியா, தென்கொரியா மற்றும் சர்வதேச மார்க்கெட்டுகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த புதிய பிளாட்பார்ம்களில் எஞ்சின்கள் தயாரிக்கப்படும். இதற்கு 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை பிடிக்கும். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தயாரிப்புகளுக்காக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம்.
இதில், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும்," என்று கூறினார்.
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த சாங்யாங் மோட்டார்ஸ் மஹிந்திரா கைக்கு வந்தபின் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், மஹிந்திரா கணிசமான நிதி ஒதுக்கீடு செய்து வருவதால், சர்வதேச அளவில் வர்த்தக விரிவாக்கப் பணிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








