வெரிட்டோ பிளாட்பார்மில் ஹேட்ச்பேக் கார்: மஹிந்திரா தயாரிக்கிறது

கடந்த வியாழக்கிழமை புதிய வெரிட்டோ காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. பல மாற்றங்களுடன் வந்துள்ள புதிய வெரிட்டோ மஹிந்திராவுக்கு விற்பனையில் புதுத்தெம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், யுட்டிலிட்டி கார் மார்க்கெட் தவிர, சிறிய ரக கார் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிக்கும் முயற்சிகளை மஹிந்திரா துவங்கியிருக்கிறது. இதன்படி, தனது முன்னாள் பார்ட்னர் ரினால்டிடமிருந்து பெற்ற வெரிட்டோ கார் பிளாட்பார்மில் புதிய ஹேட்ச்பேக் காரை வடிவமைத்து வருவதாக அந்த நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா சிஇஓ பிரவீன் ஷா கூறுகையில்," கார் மார்க்கெட்டில் புதிய மாடல்களை களமிறக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், வெரிட்டோ பிளாட்பார்மில் புதிய காரை வடிவமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது," என்று கூறினார்.
ஆனால், புதிய கார் பற்றி விரிவான விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இந்த புதிய கார் ரூ.5 லட்சம் விலைக்குள் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








