புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா ரேவா தீவிரம்

ரேவா என்எக்ஸ்ஆர் தவிர பல புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த இருப்பதாக மஹிந்திரா ரேவா தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் என்எக்ஸ்ஆர் என்ற புதிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா ரேவா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. 4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த புதிய எலக்ட்ரிக் கார் ரூ.4.5 லட்சத்தில் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த எலக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 160கிமீ வரை பயணம் செய்ய முடியும் என்பதே முக்கிய சிறப்பு. இந்த நிலையில், ரேவா என்எக்ஸ்ஆர் காரை தொடர்ந்து மஹிந்திரா விற்பனை செய்து வரும் கார் மற்றும் சிறிய ரக வர்த்தக வாகனங்களின் எலக்ட்ரிக் மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக ரேவா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ரேவா நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சேத்தன் மெயினி கூறுகையில்,"அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.

மஹிந்திராவின் வெரிட்டோ, ஜியோ, மேக்ஸிமோ ஆகியவற்றின் எலக்ட்ரிக் வெர்ஷன் மாடல்களை வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இவற்றின் புரோட்டோ டைப் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுவிட்டன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒவ்வொரு மாடலாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 28, 2012, 15:46 [IST]
English summary
Mahindra's subsidiary Reva is planing to add more electric car models of its portfolio. The company is now working on new electric cars include Mahindra portfolio and they will hit market coming years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+