மஹிந்திராவின் எலக்ட்ரிக் மேக்ஸிமோ: ஒரு சார்ஜுக்கு 80 கிமீ பயணம்

Maxximo
பேட்டரியில் இயங்கும் மேக்ஸிமோ மினி வேனை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த எலக்ட்ரிக் மேக்ஸிமோவின் சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

பெட்ரோல் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், டீசல் கார்களுக்கும் ஆப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீசல் கார்கள் மீது 2.5 லட்ச ரூபாய் வரை கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால், மாற்று எரிபொருள் வாகனங்களின் மீதான கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை கையகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய எலக்ட்ரிக் கார்களை வடிவமைத்து வருகிறது.

முதலில் ரேவா பிராண்டிலேயே என்எக்ஸ்ஆர் என்ற முற்றிலும் புதிய எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் அக்டோபரில் எலக்ட்ரிக் மேக்ஸிமோ மினி வேனை விற்பனைக்கு விட மஹிந்திரா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரில் சோதனை நடத்தப்பட்டு வரும் இந்த புதிய எலக்ட்ரிக் மினி வேன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ வரை செல்ல முடியும் என்று மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 14, 2012, 11:07 [IST]
English summary
Mahindra is planning to launch a electric version of its Maxximo Mini van by October. Now, the new electric maxximo has been spotted testing on Bangalore roads.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+