புதிய இருசக்கர வாகனங்களை வரிசை கட்டும் மஹிந்திரா

Mahindra Stallio
புத்தம் புதிய 300 சிசி பைக் உள்பட 3 புதிய மோட்டார்சைக்கிள்களை விரைவில் அறிமுகம் செய்கிறது மஹிந்தரா. மேலும், கிராமப்புற மார்க்கெட்டை பிடிக்க மொபட்டை களமிறக்குவது குறித்தும் அந்த நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

முதலில் மேம்படுத்திய ஸ்டாலியோ பைக்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கியர் பாக்ஸ் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு தற்போது ஸ்டாலியோ பைக்கின் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன. எனவே, விரைவில் ஸ்டாலியோ விற்பனைக்கு வருகிறது.

இதைத்தொடர்ந்து, 300 சிசி எஞ்சின் கொண்ட மோஜோ சூப்பர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதுதவிர, மூன்றாவதாக புதிய இருசக்கர வாகனத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால், அதன் விபரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. அது ஸ்கூட்டராகவும் இருக்கலாம் அல்லது பைக் மாடலாகவும் இருக்கலாம்.

இதுகுறித்து மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி விரென் போப்லி கூறுகையில்," இந்த ஆண்டு புதிய ஸ்டாலியோ, மோஜோ உள்பட 3 பைக் மாடல்களையும், 2 ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, புதிய மாடல்களையும் அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.

ஸ்கூட்டர் மூலம் நகர்ப்புற சந்தையில் முக்கிய இடம் பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம். இதேபோன்று, கிராமப்புற சந்தையிலும் ஸ்திரமான இடம் பெறுவதற்கு அதற்கேற்ற தயாரிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம்.

கிராமப்புற மார்க்கெட்டுக்கு புதிய மொபட் மாடலையும் அறிமுகம் செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 23, 2012, 16:54 [IST]
English summary
Country's leading vehicle manufacturer Mahindra is all set to launch 5 new two wheeler models including 3 motorcycles this year. The company also looking to launch new moped model in the rural market, says company's top official.
மேலும்... #mahindra #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+