புதிதாக 350 கார் சர்வீஸ் ஸ்டேஷன்களை திறக்கும் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனம் யூஸ்டு கார் விற்பனை மற்றும் அனைத்து நிறுவனங்களின் கார்களை பழுது நீக்கித் தரும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
நாடு முழுவதும் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் 150 சர்வீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் தர நகரங்களிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 350 மல்டி பிராண்டு சர்வீஸ் மையங்களை திறக்க இருப்பதாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் அறிவித்துள்ளது. இதற்காக, ரூ.250 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. பங்கு பத்திரங்களை வெளியிட்டு நிதி ஆதாரம் திரட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ராஜீவ் துபே கூறுகையில்,"நாட்டின் கார் சர்வீஸ் மார்க்கெட் 20,000 கோடியாக இருக்கிறது. எனவே, கார் சர்வீஸ் மையங்களுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு இருக்கிறது.
இதைக் கருத்தில்க்கொண்டே புதிதாக சர்வீஸ் மையங்களை திறக்கிறோம். சிறப்பாக சேவை வழங்குவதோடு இந்த மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








