எக்ஸ்யூவி உற்பத்தியை கூட்டும் மஹிந்திரா: இந்த வாட்டியாவது கிடைக்குமா?

Mahindra XUV 500
தற்போது 3000 ஆக உள்ள எக்ஸ்யூவியின் மாத உற்பத்தியை 4000ஆக உயர்த்துகிறது மஹிந்திரா. இதனால், அடுத்த முறை புக்கிங் செய்ய முடியுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி மார்க்கெட்டில் எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது. உற்பத்தியைவிட தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மஹிந்திரா அவ்வப்போது எக்ஸ்யூவியின் உற்பத்தி திறனை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஆனால், தேவையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது மஹிந்திரா. கடந்த பிப்ரவரியில் நடந்த இரண்டாம் கட்ட புக்கிங் லாட்டரி குலுக்கல் போன்று நடத்தப்பட்டதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்தும் கார் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், மேமாதம் முதல் எக்ஸ்யூவி மாத உற்பத்தியை 3000 யூனிட்டிலிருந்து 4000 யூனிட்டாக மஹிந்திரா அதிகரிக்கிறது. இதனால், தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, இத்தாலி, சிலி உள்ளிட்ட நாடுகளில் எக்ஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதனால், உற்பத்தி அதிகரித்தாலும் கூட உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், மாத உற்பத்தியை விரைவில் 5000 யூனிட் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, April 30, 2012, 10:28 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+