எக்கச்சக்க டிமான்ட்.. எக்ஸ்யூவி உற்பத்தியை மேலும் கூட்டும் மஹிந்திரா!
தேவையை சமாளிக்கும் வகையில், எக்ஸ்யூவி 500 உற்பத்தியை மாதத்திற்கு 5,000 ஆக உயர்த்துகிறது மஹிந்திரா.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 500 மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. எக்ஸ்யூவிக்கு தொடர்ந்து அதிக டிமான்ட் இருப்பதால் உற்பத்தியை அவ்வப்போது அதிகரித்து வருகிறது மஹிந்திரா.

கடந்த மாதம்தான் எக்ஸ்யூவி உற்பத்தியை மாதத்திற்கு 4,000 என்ற அளவில் உயர்த்தியது மஹிந்திரா. இந்த நிலையில், கடந்த வாரம் எக்ஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் துவங்கியது மஹிந்திரா.
இந்த முறை நாடுமுழுவதும் புக்கிங் நடப்பதால் தேவை அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எக்ஸ்யூவி உற்பத்தியை மேலும் கூட்டுகிறது மஹிந்திரா.
வரும் செப்டம்பர் முதல் எக்ஸ்யூவி உற்பத்தியை 5,000 ஆக அதிகரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், எக்ஸ்யூவியின் தேவையை சமாளிக்க முடியும் என்று மஹிந்திரா நம்புகிறது.


Click it and Unblock the Notifications








