கென்யாவில் கும்பலாக வாகனங்களை களமிறக்கிய மஹிந்திரா
கென்யாவில் எக்ஸ்யூவி, ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட பல மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா.
சர்வதேச வர்த்தகத்தை விரிவாக்கி வரும் மஹிந்திரா நிறுவனம் ஆப்ரிக்க மார்க்கெட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தென் ஆப்ரிக்காவில் ஏற்கனவே எக்ஸ்யூவி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் தற்போது கென்ய மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ, பிக்கப் டிரக்குகள், மேக்ஸிமோ மினி டிரக் மாடல்கள் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. சிம்பா நிறுவனம் கென்யாவில் மஹிந்திரா வாகனங்களை விற்பனை செய்வதற்கான வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க, மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான மஹிந்திரா நிறுவன மூத்த பொதுமேலாளர் சஞ்சய் ஜாதவ் கூறுகையில், கென்ய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஆப்ரிக்க மார்க்கெட்டில் வேகமாக விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறோம்.
மேலும், எங்களது தயாரிப்புகள் நிச்சயம் ஆப்ரிக்க வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். எங்களது யுட்டிலிட்டி வாகனங்கள் ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, எகிப்து மற்றும் தென் மற்றும் மத்திய அமெரிக்க மார்க்கெட்டுகளில் நன் மதிப்பை பெற்றுள்ளன.
இதேபோன்று, கென்ய மார்க்கெட்டிலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








