இந்த ஆண்டு 5 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

நாட்டின் மிகப்பெரிய யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
தனது மார்க்கெட்டை வலுப்படுத்த தனது கீழ் இயங்கும் சாங்யாங் மோட்டார்சின் தயாரிப்புகளையும் இந்தியாவில் களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 5 புதிய கார் மாடல்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய கார் மாடல் ஒன்றையும், சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியையும் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
இதில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மினி ஸைலோ மற்றும் ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் கார் ஆகியவை தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதற்கடுத்து, உலக அளவில் பிரபல சாங்யாங் மோட்டார்சின் தயாரிப்பான கொரண்டோ காம்பெக்ட் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், கார் மார்க்கெட்டில் புதியதோர் இடத்தை தனக்கு பிடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் ஆணித்தரமாக நம்புகிறது.


Click it and Unblock the Notifications








