மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோ மாடலை களமிறக்கும் மஹிந்திரா

Mahindra Scorpio
வடிவமைப்பில் கூடுதல் நீளம் மற்றும் அகலத்துடன் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோவை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.

மஹிந்திராவுக்கு எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பட்டத்தை வாங்கி கொடுத்த மாடல் ஸ்கார்ப்பியோ. என்ட்ரி லெவல் எஸ்யூவி மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக ஸ்கார்ப்பியோ விற்பனையில் நிலையான இடத்தை தக்கவைத்து வருகிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் பல புதிய மாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எக்ஸ்யூவி 500 தந்த உற்சாகம் ஒருபக்கம் இருந்தாலும், புதிய மாடல்களால் ஸ்கார்ப்பியோவுக்கு வந்துகொண்டிருக்கும் நெருக்கடிகளையும் மஹிந்திரா புரிந்து கொண்டுள்ளது.

எனவே, அடுத்த தலைமுறைக்கான வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் தற்போது ஸ்கார்ப்பியோவை மஹிந்திரா மாற்றி வருகிறது. டபிள்யூ 105 என்ற குறியீட்டு பெயரில் புதிய ஸ்கார்ப்பியோவை வடிவமைக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கியுள்ளது.

பழைய பிளாட்பார்மிலேயே வடிவமைக்கப்பட்டாலும், கூடுதல் நீள அகலம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் ஸ்கார்ப்பியோவை மாற்ற மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ஆல் வீல் ட்ரைவ் மற்றும் டீசல் எஞ்சினுடன் புதிய ஸ்கார்ப்பியோ வரும் 2014ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 2, 2012, 14:47 [IST]
English summary
Country's largest utility maker Mahindra planning to launch next generation Scorpio Suv by 2014. The company is busy developing the new scorpio of its R&D center. The new scorpio will be little longer and broader than current version, sources said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+