சென்னையில் நாளை விற்பனைக்கு வருகிறது புதிய வெரிட்டோ!

சென்னையில் புதிய வெரிட்டோவை நாளை முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா.

வடிவமைப்பில் புதிய மாறுதல்களுடன் புதிய வெரிட்டோவை மஹி்ந்திரா வடிவமைத்துள்ளது. மேலும், புதிய வெரிட்டோவை வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Mahindra Verito

வெரிட்டோ சிஎஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய வெரிட்டோவில் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், லிட்டருக்கு 21.03 கிமீ மைலேஜ் தரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால், புதிய வெரிட்டோ மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும், வரிச் சலுகையை பயன்படுத்தி ரூ.40,000 குறைவான விலையில் புதிய வெரிட்டோவை களமிறக்க மஹிந்திரா முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பெக்ட் செடான் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் மாருதி டிசையர் மார்க்கெட்டை உடைக்கும் அம்சங்களுடன் புதிய வெரிட்டோவை நம்பிக்கையுடன் மஹிந்திரா களமிறக்குகிறது.

புதிய வெரிட்டோ நாளை முதல் சென்னையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2012, 17:01 [IST]
English summary
Mahindra to launch the Verito compact sedan Tomorrow in Chennai. The new verito is expected to be priced around Rs. 40,000 less than the current model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+