வரும் 20ந் தேதி விற்பனைக்கு வருகிறது மஹிந்திரா குவான்ட்டோ!

குவான்ட்டோ
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குவான்ட்டோ காரை வரும் 20ந்தேதி மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வருகிறது.

எக்ஸ்யூவி 500ஐ மஹிந்திரா அறிமுகப்படுத்திய பிறகு அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய மாடல்களுக்கு ஏக எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது ஸைலோ பிளாட்பார்மில் புதிய 7 சீட்டர் காரை மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

குவான்ட்டோ என நாமகரணமிடப்பட்ட இந்த புதிய கார் 4 மீட்டருக்குள் அடக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதும், அதிக மைலேஜ் தரும் 1.5 லிட்டர் எஞ்சினுடன் வர இருப்பதும் குவான்ட்டோ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சாதாரண ஹேட்ச்பேக் கார் நீளத்தில் வந்திருக்கும் புதிய மஹிந்திரா குவான்ட்டோ தரமிக்க கட்டுமானத்துடன் வர இருக்கிறது. மேலும், ஹேட்ச்பேக் கார்களைவிட 250 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருக்கும். பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களான ஐ20 மற்றும் புன்ட்டோ கார்களின் எஞ்சின் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஆனால், குவான்ட்டோ எஞ்சின் இரட்டை டர்போ தொழில்நுட்பத்துடன் வருவதால் 100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இந்த நிலையில், வரும் 20ந் தேதி குவான்ட்டோ காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மஹிந்திரா. இந்த புதிய கார் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என தெரிகிறது.

ஸைலோ எம்பிவி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இது எஸ்யூவி தோற்றத்தை கொண்டிருக்கிறது. எனவே, குறைந்த விலை எஸ்யூவி காராகவும் கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 7, 2012, 11:44 [IST]
English summary
Mahindra is all set to launch Quanto on 20th september. The 7 seater mini suv will be introduced with 1.5 liter twin turbo engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+