அடுத்த ஆண்டு குட்டி வெரிட்டோவை களமிறக்கும் மஹிந்திரா

காம்பெக்ட் செடான்(சிஎஸ்) என்ற புதிய ரக குட்டி செடான் கார்களு்ககு மார்க்கெட்டில் தனி மவுசு கிளம்பியுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவாக இருப்பதால் வரிச்சலுகை கிடைக்கிறது. இந்த ரகத்தில் வந்த மாருதி டிசையர் விற்பனையில் சக்கைபோடு போடுகிறது.
இதனால், மஹிந்திராவும் தனது வெரிட்டோ காரின் காம்பெக்ட் ரகத்தை வடிவமைத்து வருகிறது. குட்டி செடான் காராக இருக்கும் இந்த புதிய வெரிட்டோவை வரும் ஆண்டு மார்ச்சில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பிற மாடல்களுக்கு சவாலான விலையில் களமிறக்க முடியும் என்பதால் எளிதாக வாடிக்கையாளர் கவனத்தை திசை திருப்பலாம். மேலும், அதிக மைலேஜ் கொடுக்கும் டீசல் எஞ்சினுடன் வர இருப்பதால் நிச்சயம் மார்க்கெட்டில் குட்டி வெரிட்டோவுக்கு ஓர் இடம் உண்டு என்ற பெரும் நம்பிக்கையில் இருக்கிறது மஹிந்திரா.


Click it and Unblock the Notifications








