வரும் செப்டம்பரில் குட்டி வெரிட்டோ: மஹிந்திரா அறிவிப்பு

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனத்துடன் இணைந்து லோஹன் செடான் காரை மஹிந்திரா விற்பனை செய்து வந்தது.
கடந்த ஆண்டு கூட்டணியிலிருந்து பிரிந்தபோது, எஸ்யூவி மாடல்களை மட்டுமே நம்பியிராமல் லோஹன் காரின் உற்பத்தி மற்றும் விற்பனை உரிமையை மஹிந்திரா எடுத்துக்கொண்டது.
மேலும், தனது பிராண்டில் லோஹனை வெரிட்டோ என்று பெயர் மாற்றம் செய்து மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வரிச் சலுகை பெறும் விதத்தில் செடான் கார்களை 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக பெரும்பாலான நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
டிசையரை 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக மாற்றி தற்போது மாருதி விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று, வரிச்சலுகை பெறுவதற்காக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வெரிட்டோவை மஹிந்திரா மாற்றியுள்ளது.
அதிக மைலேஜ் மற்றும் தாராள இடவசதி கொண்ட காராக டாக்சி மார்க்கெட்டில் பெயரெடுத்த வெரிட்டோவை தனிநபர் கார் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிக்க வைக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. குட்டி வெரிட்டோ குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் வெளியாகி வந்தநிலையி்ல், வரும் செப்டம்பரில் புதிய வெரி்ட்டோவை அறிமுகம் செய்ய உள்ளதாக மஹிந்திராவே தற்போது கூறியுள்ளது.
ஆனால், புதிய வெரிட்டோவின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்த நிறுவனம் தகவல் எதையும் தெரிவிக்கவி்லலை. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் புதிய வெரிட்டோ கிடைக்கும் என்பதும், ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்ற எதிர்பார்ப்பும் வெரிட்டோ மீதான ஆவலை தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








