மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸைலோ: மஹிந்திரா அறிமுகம்

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் ஸைலோ எம்பிவி காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது. அருமையான வடிவைப்பு, அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால் ஸைலோ மார்க்கெட்டில் தனி இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளில் ஸைலோவை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா. புதுப்பொலிவுடன் ஹெட்லைட்டுகள், புதிய வடிவமைப்பில் டெயில் லேம்புகள் என வெளிப்புறம் புதிய ஸைலோ முன்பைவிட அதிக கவர்ச்சியாகவே இருக்கிறது.
வீல் ஆர்ச்சிலும் சிறு மாற்றத்தை மஹிந்திரா செய்துள்ளதால் பக்கவாட்டு அழகும் பக்கா சொல்ல வைக்கிறது. ரியர் ஸ்பாய்லரும் ஸைலோவுக்கு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது.
உள்பக்க வடிவைப்பிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், சிலீர் உணர்ச்சியை கொடுக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் போன் கன்ட்ரோல் ஸ்விட்சுகள், ட்வின் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டியூவல் ஏர் கன்டிஷனிங் என்று புதிய ஸைலோவில் புதுமைகளை புகுத்தியுள்ளது மஹிந்திரா.
புதிய ஸைலோ டி-2, டி-4, இ-4, இ-8 மற்றும் இ-9 ஆகிய 5 வேரியண்ட்களில் வந்துள்ளது. புதிய ஸைலோ 2 விதமான டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். இதில், 2489 சிசி எம்டிஐ சிஆர்டிஇ டீசல் எஞ்சின் 95 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இரண்டாவது, 2489 சிசி திறன் கொண்ட எம்-ஈகிள் சிஆர்டிஇ டீசல் எஞ்சின். இந்த எஞ்சின் 112 பிஎஸ் ஆற்றலை வாரி இறைக்கும் ஆற்றல் கொண்டது.
இதனிடையே, 5 பேர் செல்லும் வசதியுடன் புதிய மினி ஸைலோவை மஹிந்திரா அறிமுகப்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஸைலோவின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
ஸைலோ டி-2: ரூ.7.37 லட்சம்
ஸைலோ டி-4: ரூ.7.77 லட்சம்
ஸைலோ இ-4: ரூ.8.11 லட்சம்
ஸைலோ இ-4 ஏபிஎஸ் : ரூ.8.34 லட்சம்
ஸைலோ இபி ஏபிஎஸ்: ரூ.9.10 லட்சம்
ஸைலோ இ-8 ஏபிஎஸ், ஏர்பேக்: ரூ.9.47 லட்சம்
ஸைலோ இ-9: ரூ.10.25 லட்சம்


Click it and Unblock the Notifications








