மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மஹிந்திரா தார் ஜீப் அறிமுகம்

எந்தவொரு சாலைநிலைகளுக்கும் ஏற்ற தகவமைப்பு கொண்ட மஹிந்திரா தார் ஜீப்புக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், தார் ஜீப்பில் ஏசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததை வாடிக்கையாளர்கள் குறையாக கருதினர்.
இதனை மனதில் கொண்டு ஏசி வசதியுடன் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட தார் ஜீப்பை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதில் எஞ்சின் இம்மொபைலைஸரும் பொருத்தப்பட்டிருக்கிறது.
புதிய தார் ஜீப் இரண்டு விதமான எஞ்சின் வகைகளி்ல் கிடைக்கும். 2.5 லிட்டர் டிஐ டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு எஞ்சின் வகைகளில் கிடைக்கும்.
மேலும், ஏற்கனவே தார் ஜீப் வைத்துள்ளவர்களும் அருகாமையில் உள்ள மஹிந்திரா டீலர் அல்லது அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் ஸ்டேஷன்களில் தங்களது தார் ஜீப்பில் ஏசி வசதியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட தார் ஜீப் டெல்லியில் ரூ.6.86 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








