'கெத்'தாக ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய மஹிந்திரா எக்ஸ்யூவி!
4 ஸ்டார் ரேட்டிங் தர அந்தஸ்துடன் ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து இரண்டாவது வெளிநாட்டு மார்க்கெட்டில் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. விற்பனைக்கு அனுமதி பெறுவதற்கு முன் ஆஸ்திரேலிய தர நிர்ணய நிறுவனம் நடத்திய சோதனையில் எக்ஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் எக்ஸ்யூவியை மஹிந்திரா களமிறக்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் 2 வீல் ட்ரைவ் சிஸ்டம் எக்ஸ்யூவி ரூ.15 லட்சத்திலும், ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் கொண்ட எக்ஸ்யூவி ரூ.16.5 லட்சம் விலையிலும் அறிமுகமாகியிருக்கிறது.
ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் செவர்லே கேப்டிவா எஸ்யூவியை ஒப்பிடும்போது இது மிக குறைந்த விலை என்பதால், விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி விரைவாகவே முக்கிய இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அடுத்து இத்தாலி, சிலி உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எக்ஸ்யூவியை அமெரிக்க மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








