மினி ஸைலோவுக்கு குவான்ட்டோ என நாமகரணமிட்ட மஹிந்திரா

பண்டிகை கால அறிமுகமாக உள்ள கார்களில் அதிக எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் மாடல் மினி ஸைலோ. தற்போது விற்பனையாகி வரும் ஸைலோவுக்கு கத்தரி போட்டு இந்த புதிய காரை வடிவமைத்துள்ளது மஹிநதிரா.
இதன் முக்கிய அம்சம் தினசரி பயன்பாட்டு காராக வருவதுதான். 5 பேர் தாராளமாக பயணம் செய்யும் வசதிகொண்டதாக வரும் புதிய மினி ஸைலோவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.
இதுவரை மினி ஸைலோ என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய காருக்கு குவான்ட்டோ என மஹிந்திரா பெயர் சூட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸைலோ, பொலிரோ என மஹிந்திரா கார்களின் பெயர்களின் முடிவில் ஆங்கில எழுத்தான ஓ என்று முடிகிறது. இதேபோன்று, தற்போது ஓ ஆங்கில எழுத்தில் முடியும் வகையில் குவான்ட்டோ என்று மினி ஸைலோவுக்கும் மஹிந்திரா நாமகரணமிட்டுள்ளது.
ஸைலோவுக்கும், குவான்ட்டோவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்றாலும் குவான்ட்டோ அதிக மைலேஜ் தரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பார்க்கிங் பிரச்னைக்குரியவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








