புதிய எஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங்: மஹிந்திரா அறிவிப்பு

வரும் ஜூன் 8ந் தேதி முதல் மஹிந்திரா புதிய எக்ஸ்யூவி 500வுக்கு மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. இந்த முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா ஷோரூம்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் புத்தம் புதிய எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் விற்பனை செய்வதற்காக குளோபல் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய எஸ்யூவியின் வடிவமைப்பு அனைவராலும் பேசப்படுகிறது.

Mahindra XUV 500

இந்த நிலையில், இதுவரை 2 முறை புதிய எஸ்யூவிக்கு மஹிந்திரா முன்பதிவை நடத்தியது. ஒவ்வொரு முறையும் 10 நாட்கள் மட்டுமே நடந்தது. மேலும், கடந்த முறை 19 முக்கிய நகரங்களில் மட்டுமே புக்கிங் நடந்தது.

இரண்டாம் முறை நடந்த முன்பதிவின்போது 25,000 பேர் புதிய எஸ்யூவியை வாங்குவதற்கு விண்ணப்பங்களை கொடுத்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், குலுக்கலில் தேர்வு வாடிக்கையாளர் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களும் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில், வரும் ஜூன் 9ந் தேதி முதல் புதிய எக்ஸ்யூவி 500வுக்கு முன்பதிவை துவங்க உள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ஆனால், இந்த முறை காலக்கெடு எதுவும் அறிவிக்கப்பட வில்லை.

இருப்பினும், முன்பு போன்றே எகிடுதகிடான ஆர்டர்கள் குவிந்தால் முன்பதிவை உடனடியாக நிறுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 28, 2012, 12:54 [IST]
English summary
Mahindra & Mahindra Ltd. (M&M), India’s leading SUV manufacturer, today announced that it will open bookings for its cheetah-inspired XUV500 from 8th June, 2012. With this announcement, the XUV500 will now be available across India including the existing 19 cities where it had been launched earlier.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+