மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு இன்று முதல் மீண்டும் புக்கிங்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு தேவை அதிகமாக இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு 9 மாதங்களில் இதுவரை இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு புக்கிங் பெறப்பட்டுள்ளது.
இதனால், எக்ஸ்யூவி வாங்க ஆவலாக இருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த குறையை போக்கும் விதத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களில் இன்றுமுதல் புக்கிங் துவங்கப்பட்டுள்லது.
ரூ.80,000 முன்பணம் செலுத்தி எக்ஸ்யூவியை புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்யூவியின் உற்பத்தி திறன் மாதம் 4,000 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால், இந்த முறை புக்கிங் செய்வதற்கு கால அளவு எதுவும் பற்றி மஹிந்திரா அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








