எக்ஸ்யூவி, ஸைலோ விலையை கணிசமாக உயர்த்த மஹிந்திரா திட்டம்

Mahindra XUV 500
உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதை சமாளிக்க, புதிய எஸ்யூவி மற்றும் ஸைலோ உள்ளிட்ட கார்களின் விலையை கணிசமாக உயர்த்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் கார் உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செலவீனம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விலை உயர்வை மீ்ண்டும் கையிலெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கார் நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனமும் விலை உயர்வை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முறை கார்களின் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை கார்களின் விலையை கணிசமாக உயர்த்த மஹிந்திரா முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்யூவி 500, ஸைலோ, பொலிரோ, வெரிட்டோ உள்ளிட்ட அனைத்து கார்களின் விலையையும் கணிசமாக உயர்த்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வரும் 8ந் தேதி முதல் எக்ஸ்யூவிக்கு 3ம் கட்ட புக்கிங்கை மஹிந்திரா தொடங்க உள்ளது.

புதிய எக்ஸ்யூவியை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் கூடுதல் தொகை கொடுக்க வேண்டி இருக்கும் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 5, 2012, 14:43 [IST]
English summary
With the value of India Rupee hitting rock bottom, carmakers are being compelled to increase prices of their vehicles. India's leading SUV maker, Mahindra is also reportedly planning to hike prices of its vehicles including the top selling XUV 500 SUV and Xylo multi-purpose vehicle by 10 to 15 per cent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+