மேக்ஸிமோ பிளாட்பார்மில் புதிய எம்பிவி: மஹி்ந்திரா தயாரிக்கிறது
மேக்ஸிமோ மினி டிரக் பிளாட்பார்மில் புதிய எம்பிவியை மஹிந்திரா வடிவமைத்துள்ளது. இந்த எம்பிவி தற்போது சென்னையில் உள்ள வாகன ஆராய்ச்சி மையத்தில்(எம்ஆர்வி) தற்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
எம்பிவி கார்களுக்கான வரவேற்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், பல முன்னணி கார் தயாரிப்பாளர்கள் எம்பிவி ரக கார்களை அறிமுகம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். சிறிய கார்கள் விற்பனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த மாருதி கூட சமீபத்தில் எர்டிகா என்ற எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து, எவாலியா என்ற எம்பிவி காரை நிசானும், என்ஜாய் என்ற எம்பிவி காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளன. அந்தளவுக்கு எம்பிவி கார் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ஸைலோ எம்பிவி கார் மூலம் நன்மதிப்பை பெற்றுள்ள மஹிந்திரா நிறுவனம் அதைவிட குறைவான விலையில் புதிய எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேக்ஸிமோ மினிடிரக் பிளாட்பார்மில் புதிய எம்பிவி காரை தற்போது அந்த நிறுவனம் வடிவமைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸைலோவைவிட குறைந்த விலையில் மாருதி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால், எர்டிகாவுக்கு போட்டியை கொடுக்கும் வகையில், குறைந்த விலை கொண்டதாக புதிய எம்பிவியை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளாகவும் கூறப்படுகிறது.
ஆனால், புதிய எம்பிவி கார் எப்போது அறிமுகமாகும், இருக்கை வசதி மற்றும் விலை விபரம் உள்ளிட்ட தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








